இளநீர் வழுக்கை - 1 கப்
கன்டன்ஸ்ட் மில்க் - ½ கப்பால் - 2 கப்
சர்க்கரை - ½ கப்
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
நட்ஸ் - ¼ கப் (நறுக்கியது)
செய்முறை :
* பாதியளவு இளநீர் வழுக்கையில் சிறிது இளநீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
* மீதமுள்ள இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* அடிகனமான பாத்திரத்தில் கன்டன்ஸ்ட் மில்க் ஊற்றி அதில் சர்க்கரை, பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்
* பால் பாதியாக குறையும் வரை சிம்மில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
* பால் பாதியாக சுண்டியதும் தீயை அணைத்து விட்டு அரைத்த இளநீர் விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பின்பு மீதமுள்ள நறுக்கிய இளநீர் வழுக்கை, இளநீர், ஏலக்காய் தூள், நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
* பின்பு பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து கூலாக பரிமாறவும்.
* இனிப்பான குளுகுளு இளநீர் பாயாசம் ரெடி.Marriage catering services
Comments