நுங்கு பாயாசம்
தேவையான பொருட்கள் #www.naarayanacatering.com
பால் - 2 கப்
நுங்கு - 6
நாட்டுச் சர்க்கரை - 1/4 கப்
பாதாம், முந்திரி - தேவையான அளவுஏலக்காய் பொடி - 1/4
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை :
நுங்கு மேல் இருக்கும் தோலை நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதில் கொஞ்சம் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். மீதம் உள்ளதை மசித்துக் கொள்ளுங்கள்.
கின்னத்தில் பால் ஊற்றி நன்குக் காய்ச்சிக் கொள்ளுங்கள். எவ்வளவு வேண்டுமோ அந்த அளவிற்கு பாலை சுண்டக் காய்ச்ச வேண்டும்.
காய்ச்சியதும் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.சிறிது நேரம் தீயைக் குறைவாக வைத்துக் கொதிக்க விடவும்.
தற்போது மசித்த நுங்கை போட்டுக் கிளறவும். அடுத்ததாக நறுக்கிய துண்டுகளை போடவும்.
தற்போது அடுப்பை அணைத்துவிட்டு பாயாசத்தை இறக்கிவிடுங்கள்.
தாளிக்க வானலி வைத்து செய் ஊற்றி பாதாம் முந்திரியை வறுத்து பாயாசத்தில் கொட்டவும்.
அவ்வளவுதான் சுவையான நுங்கு பாயாசம் தயார். இதை சூடாக சாப்பிடுவதைக் காட்டிலும் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனு சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.
படிக்க :
தகிக்கும் வெயில்...தாகம் தீர்க்க வந்துவிட்டது நுங்கு..!
Comments